முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
பொருள் :
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருக்கச் செய்யும். முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்து விடும்.
Diapositiva 2
சூழல்
ராமு மூன்றாம் ஆண்டில் பயில்கிறான். தேர்வுகளில் குறைவான புள்ளிகளைப் பெறும் அவனை மற்ற மாணவர்கள் தாழ்வாக எண்ண ஆரம்பித்தனர். குழு வேலையின்போது ராமுவை ஒதுக்கி வைப்பர். இது ராமுவின் மனதைக் காயப்படுத்தியது. இருப்பினும், தேர்வில் தான் நல்ல புள்ளிகளைப் பெற வேண்டும் என்பதற்காக கடினமாக முயற்சி செய்தான். தினமும், பாடத்தை மீள்பார்வை செய்தல், பயிற்சிகள் செய்தல் போன்றவற்ற்றறை செய்து முயற்சித்தான்.